பறவைகள் பற்றிய தகவல்கள்

27 மாசி 2012 திங்கள் 09:32 | பார்வைகள் : 16719
நாம் பார்த்து பொறாமைப்படும் இனங்களில் பறவை இனம்தான் முதலில் இருக்கும். சுதந்திரத்திற்கு பெயர்போன பறவை இனங்களைப் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
பொதுவாக பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில், பறவைகளின் கால்களில் சிறு வளையத்தை மாட்டிவிட்டு, அதன் மூலம் பறவையினங்களின் வாழ்வியல் முறை, நடமாட்டம், ஆயுள், இனவிருத்தி போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர்.
கால்களின் அளவுக்கு ஏற்ப சிறிய மெட்டி போன்று இந்த வளையம் அமையும். இந்த வளையத்தில் சில குறியீட்டு தகவல்கள் இருக்கும். இதுபோன்று வளையமிட்ட பறவையைப் பார்க்கும் பறவை ஆர்வலர்கள், இந்த வளையத்தில் இருக்கும் குறியீட்டைக் கொண்டு, வளையத்தை மாட்டியவர்களை தொடர்பு கொண்டு பேசும் போது பறவை தற்போது, எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயல்கிறது.
இனி பறவைகளைப் பற்றி பார்ப்போம்...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்இளைப்பாற மரங்கள் இல்லை.கலங்காமலே கண்டம் தாண்டுமே.. இதை நினைத்துத்தான் நாம் நமக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் குழந்தைகளா..
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025