Paristamil Navigation Paristamil advert login

இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு

இராட்சத டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு

2 ஐப்பசி 2016 ஞாயிறு 10:15 | பார்வைகள் : 14968


 மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் இராட்சத டைனோசர் ஒன்றின் காலடித்தட அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் பற்றிய விபரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மங்கோலிய மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த இராட்சத டைனோசர் தடத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது இந்த காலடித் தடம் 106 சென்டிமீட்டர் நீளமும் 77 சென்டிமீட்டர் அகலமும் உடையது.
 
பரந்த மங்கோலிய பாலைவனத்தில் நிறைய காலடித்தடங்களைக் கண்டுபிடித்தாலும் 70 மில்லியன், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தடயம் அரிதினும் அரிதாக நோக்கப்படுகிறது.
 
நீண்ட கழுத்தையுடைய டைட்டனோசர் என்ற இந்த டைனோசர் 30 மீட்டர் நீளம், 20 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
 
மங்கோலிய அறிவியல் அகாடமியுடன் ஜப்பான் பல்கலைக்கழகம் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்