மூளை பற்றிய சுவாரசிய தகவல்
3 ஆனி 2014 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 17448
எமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை.
நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது உங்கள் மூளை புதிய கோணங்களில் சிந்தித்தலை அதிகமாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒரே கோணத்தில் நிலைத்திருக்காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய செயல்முறைகளை உருவாக்க முடியும்.
மன அழுத்தம் மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும்.
மூளை பல பணிகளை ஒரே நேரம் செய்வது சாத்தியமற்றது. பல விதமான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது, தவறு வீதம் 50க்கு உயரும். மேலும் அவ்வேலைகளை செய்து முடிக்க இரண்டு மடங்கு அதிகமான நேரம் எடுக்கும்.
குட்டித்தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை நாளுக்கு நாள் மேம்படுத்த உதவும். நாம் தூங்கும் போது மூளையின் வலது பக்கம் "ஒழுங்குப்படுத்தல்" கடமைகளை கையாளுகிறது. அதாவது, இடது பக்க மூளை ஓய்வு எடுக்கும் பொழுது, வலது மூளை, அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை நீண்ட கால ஞாபகச் சேமிப்பில் மாற்றி, அந்த நினைவுகளை உறுதிப் படுத்தும்.
தியானம் மூளையை அமைதிப்படுத்தும். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.
நாம் தவறுகள் செய்யும் மனிதர்களையே அதிகம் விரும்புகிறோம். இந்த முடிவை ஆராய, உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஒரு பதிவு செய்த விநாடி வினா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் தவறுதலாகத் தனது தேநீர் கோப்பையை உடைத்துவிட்டார். மக்களிடம் எந்தப் போட்டியாளருக்கு உங்கள் ஆதரவு எனக் கேட்ட பொழுது, கோப்பையை உடைத்தவரையே மக்கள் அதிகம் விரும்புவதாகத் தெருவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan