நிலவின் மறுபக்கத்தில் விண்வெளி வீரர்கள் கேட்ட வினோத இசை
25 மாசி 2016 வியாழன் 23:27 | பார்வைகள் : 14753
பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவம் சயன்ஸ் சன்னல் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
'நாஸாவின் விளக்கமுடியாத ஆவணங்கள்’ என்ற எதிர்வரும் நிகழ்ச்சியிலேயே வெளியாகவுள்ளது.
இந்த ஒலியை ஒட்ட ஒரு விண்வெளி வீரர், “நீங்கள் அதை கேட்டீர்களா? விசில் அடிப்பது போன்ற சப்தம்? வூவூ?” என்று சக விண்வெளி வீரரிடம் சம்பாசித்துள்ளார்.
பின்னர் மற்றொரு விண்வெளி வீரர் குறிப்பிடும்போது, “இந்த இசை மிக வினோதமாக இருக்கிறது. எம்மை யாரும் நம்பப்போவதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்த இசை போன்ற ஒலி பற்றி பல தர்க்கரீதியான காரணங்கள் கூறப்பட்ட போதும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan