50 வருடங்களாக அணையாமல் எரியும் நரக வாயில்!

5 பங்குனி 2016 சனி 06:57 | பார்வைகள் : 14074
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு மேலாக அமைந்துள்ள Turkmenistan பாலைவனத்தில் அமைந்துள்ள “நரக வாயில்” உலக புகழ் பெற்ற ஒரு இடமாகும்.
தலைநகர் Ashgabat 260 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
51 வருடங்களாக சுடர்களை வெளியிடும் இந்த இடத்தை சுற்றி பல மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரதேசங்களில் உட்பட, இந்த தீயில் வெளியாகும் தீப்பிழம்புகளை காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் இதனை நரகத்தின் வாயில் என (The Door to hell) அழைக்கின்றனர்.
1791 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் பூமி இரண்டாக பிளந்து 70 மீட்டர் விட்டமான பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளுக்குள் பள்ளத்தில் இருந்து வெளியாகும் இயற்கை வாயு அனணைந்து விடும் எந்த நம்பிக்கையிலேயே விஞ்ஞானிகள் இதனை தீயிட்டு அழிப்பதற்கு தீர்மானித்தனர். எனினும் அன்று முதல் இன்று வரையில் அங்கு தொடர்ந்து தீ அணையாமல் எரிந்து கொண்டே உள்ளன.
2010 ஏப்ரல் மாதம் அந்த நாட்டு ஜனாதிபதி, 50 வருடங்களாக எரிந்து கொண்டிருப்பதனை மூடிவிடுதற்கு தீர்மானித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
எப்படியிருப்பினும் வருடத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இடத்தை பார்வையிட செல்கின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1