2000 ஆண்டு ரோமானிய நாணயம் கண்டுபிடிப்பு
16 பங்குனி 2016 புதன் 20:57 | பார்வைகள் : 14603
இஸ்ரேலில் வழிப்போக்கர் ஒருவர் 2000 ஆண்டு ரோமானிய நாணயம் ஒன்றை கண்டெடுத்துள்ளார். இவ்வாறான நாணயம் உலகில் கண்டுபிடிக்கப்பட்டது இது இரண்டாவது தடவையாகும்.
கி.பி. 107 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த நாணயத்தில் பேரரசர் அகஸ்டஸின் படம் பொறிக்கப்பட்டிருந்தபோதும், பேரரசர் டிராஜன் கலத்தில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது.
இவ்வாறானதொரு நாணயம் தற்போது பிரிட்டன் அருங்காட்சியகத்தில் மாத்திரமே உள்ளது.
இந்த நாணயத்தை கண்டெடுத்த வழிப்போக்கர் லோரி ரிமோனை பாராட்டி, சிறந்த பிரஜை என்ற சான்றிதழ் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய தொல்பொருள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு கலிலி பகுதியில் தனது நண்பர்களுடன் நடந்து கொண்டிருந்த ரிமோன் என்ற அந்தப் பெண் புல்வெளியில் ஒளிரும் பொருள் ஒன்றை கண்டே இந்த நாணயத்தை கண்டெடுத்துள்ளார்.
2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த ரோமானிய படையினருடன் தொடர்புபட்டதாக இந்த நாணயம் இருக்கலாம் என்று இஸ்ரேல் தொல்பொருள் திணைக்கள நாணய பிரிவின் பொறுப்பாளர் டொனால்ட் டீ. ஏரியல் குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan