Paristamil Navigation Paristamil advert login

2030ம் ஆண்டுக்குள் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடுமா?

2030ம் ஆண்டுக்குள் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடுமா?

28 சித்திரை 2016 வியாழன் 17:59 | பார்வைகள் : 13281


 அடுத்து வரும் 20 வருடங்களில் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் அபாய நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

 
உலக காலநிலை மாற்றம் காரணமாக  கடல் உயிரினங்கள் அழிவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டல கண்காணிப்பு தொடர்பிலான அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.
 
அதன் புதிய அறிக்கையில் 2030ஆம் ஆண்டிற்கு கடலின் ஒக்சிஜன் அளவு முடிவடைந்து விடும் என கணக்கிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அது கடல் உயிரினங்களுக்கு பாதகமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தும் என அந்த பிரிவின் விஞ்ஞானி மத்தேயு லோங் என்பவர் தெரிவித்துள்ளார்.
 
முக்கியமாக கடல் உயிரினங்களுக்கு ஒக்சிஜன் பெற்றுக்கொள்ள முடியாமல் அவைகளின் அழிவின் வேகம் அதிகரிக்க கூடும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உலக காலநிலை மற்றும் காலநிலை நெருக்கடி குறைவடையவில்லை என்றால் இந்த நிலைமையினை கட்டுபடுத்துவதற்கு எந்த விதமான வாய்ப்புக்களும் இல்லையென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்