உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம்

10 வைகாசி 2016 செவ்வாய் 20:39 | பார்வைகள் : 14331
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரமான லெஸிடி லா ரொனா (Lesedi la Rona) எதிர்வரும் ஜூன் மாதத்தில் லண்டனில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
1109 காரட் எடை கொண்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த வைரம் தற்போது நியூயோர்க்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டென்னிஸ் பந்தளவிலான இந்த அரிய வகை வைரத்தைக் காண்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
வைர சுரங்கங்களுக்குப் பெயர்பெற்ற தென்னாப்பிரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லெஸிடி லா ரோனா வைரம் சுமார் 70 மில்லியன் டொலர் அளவுக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.