Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகப்பெரிய மாயன் நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய மாயன் நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு!

18 தை 2018 வியாழன் 07:19 | பார்வைகள் : 13175


மெக்சிகோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
 
347 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகை உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை எனக் கூறப்படுகிறது.
 
இந்த குகை மாயன் இன மக்கள் பயன்படுத்தியது என தெரிகிறது.
 
இதன் மூலம் 15-ம் நூற்றாண்டிற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், வழிபாட்டு முறை போன்றவற்றை அறியலாம்.
 
‘கிரான் அக்குஃபெரா மாயா’ என்ற ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சக் அக்டன் என்ற அமைப்பு இந்த குகையை கண்டுபிடித்துள்ளது. இது மிகவும் ஆச்சரியமான கண்டுபிடிப்பு என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்