கொட்டாவி வருவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

30 தை 2018 செவ்வாய் 05:59 | பார்வைகள் : 12424
நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம்.
மேலும் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூறுவார்கள்.
கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றால் உண்டாகிறது.
கொட்டாவி வருவதற்கான காரணம்
நாம் சோர்வாக இருக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால், மூச்சு விடுவது மெதுவாக இருக்கும்.
மேலும் கொட்டாவி விடும் போது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு உடலில் இருந்து வெளியேறும்.
கொட்டாவி விடும் போது கண்ணீர் வருவது ஏன்?
கொட்டாவி விடும் போது அதிகப்படியான அழுத்தம் காரணமாக, கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, கண்களின் ஓரத்தில் நீர் வருவதற்கு காரணமாக உள்ளது. மேலும் இதன் காரணமாகவே கொட்டாவி விடும் போது கண்களை மூடிக் கொள்கிறோம்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025