மூளை தொடர்பான முக்கிய மர்மத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

21 மாசி 2017 செவ்வாய் 13:47 | பார்வைகள் : 13060
மனித உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்பத்தி செயற்பட வைப்பதற்கான சமிக்ஞைகளை நரம்புகளுக்கு மூளையும், சிறிதளவில் முண்ணாண் எனப்படும் முள்ளந்தண்டு எலும்பும் மேற்கொள்வதை அறிந்திருப்பீர்கள்.
எனினும் இதுவரை காலமும் உடலின் வலது, இடது புற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் மூளை மட்டுமே தொடர்புபட்டிருப்பதாக நம்பப்பட்டிருந்தது.
அதாவது உடலின் வலது புற செயற்பாடுகளுக்கு இடது மூளையும், உடலின் இடது புற செயற்பாடுகளுக்கு வலது மூளையும் காரணமாக அமைகின்றன என அறியப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இதனையும் தாண்டி முண்ணாணிற்கும் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Ruhr University Bochum பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு ஆதாரமாக தாயின் வயிற்றில் உள்ள 13 வாரங்களே ஆன குழந்தை ஒன்று இடது அல்லது வலது பெருவிரலை சூப்புவதை காட்டியுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1