3,500ஆண்டுகள் பழமை வாய்ந்த 'மம்மி' கண்டுபிடிப்பு!

19 சித்திரை 2017 புதன் 09:09 | பார்வைகள் : 12238
கெய்ரோ:எகிப்தில், 3,500ஆண்டுகள் பழமையான, 'மம்மிகள்' கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
பண்டைய எகிப்து நாகரிகத்தில், மன்னர்களின் உடலை பாதுகாப்பதை, வழக்கமாக வைத்திருந்தனர். பாதுகாக்கப்பட்ட அரச குடும்பத்தினரின் உடல்களை, பெரிய கல்லறைக்குள் வைத்து பாதுகாத்து வந்தனர். இவை, 'மம்மி' என, அழைக்கப்படுகின்றன.
இது போன்ற ஏராளமான மம்மிகள், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இங்குள்ள லக்சர் நகருக்கு அருகில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரச குடும்பத்தினரின் கல்லறை ஒன்றை, அந்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர்.அதில், சவ பெட்டி களையும், அதனுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த எட்டு மம்மிகளையும் கண்டுபிடித்து உள்ளனர்.
மம்மிகளுடன் சேர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களும், அங்கு கிடைத்துள்ளன.எகிப்திய மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025