Paristamil Navigation Paristamil advert login

மூளையில் இருந்து தகவல்களை திருடலாம்! ஆய்வில் தகவல்

மூளையில் இருந்து தகவல்களை திருடலாம்! ஆய்வில் தகவல்

1 வைகாசி 2017 திங்கள் 11:55 | பார்வைகள் : 13471


 இனி மூளையில் இருந்தும் தகவல்களை ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் திருடி விடுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
மனித மூளையை படித்து விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அது வெற்றி பெறும் பட்சத்தில் மற்றவர் மனதில் நினைப்பதையும், ரகசியமாக மனதில் மறைத்து வைத்துள்ளதையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். நியூரோ டெக்னாலஜி எனப்படும் நரம்பியல் மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்நிலையில் ஒருவரின் தன்னுடைய தகவல்களை பாதுகாத்து வைப்பதற்காக வல்லுநர்கள் 4 புதிய விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
 
அது புலனுணர்வு சுதந்திரம், மனநலத்திற்கான உரிமை, மனநலத்திறன் உரிமை மற்றும் உளவியல் தொடர்ச்சியின் உரிமை ஆகியவை ஆகும். ஒருவர் சுதந்தரமாக சிந்திக்கவும், தன்னை தகவமைத்துக் கொள்ளவும் மூளை இன்றியமையாததாக உள்ளது. 
 
ஆனால் நியூரோ தொழில்நுட்பம் அந்த சுதந்தரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூளையின் செயல்வடிவ வடிவமைப்பு புகைப்படம், மூளை-கணினி தகவல் தொடர்பு இணைப்பு உள்ளிட்டவை நியூரோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய ஆய்வுகளாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்