பெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியாகிய முக்கிய தகவல்
6 ஆடி 2019 சனி 14:46 | பார்வைகள் : 15917
இன்றைய நவீன உலகில் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமே கூட ஸ்மார்ட் போன்கள் உள்ளது.
இது மனித மூளையை வெறுமனே ஆக்கி, தனது வேலையைச் செய்ய போன்களுக்கு ஆர்டர் கொடுப்பதால் அவனது சிந்தனைகளும்,படிக்கும் ஆர்வமும் குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் ஆபாச வீடியோ பார்ப்பதால் தாம்பத்திய உறவு குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் பிரசித்தி பெற்ற உமன்ஸ் ஹெல்த் ஜர்னலின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பெண்கள் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் அவர்களின் தாம்பத்திய (உடலுறவு ) உறவுகள் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பற்ற உணர்வுகள் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வில் சுமார் 18 வயது முதல் 29 வயதுடைய (ஆண்கள் பெண்கள் )இளைஞர்கள் ஈடுபடுத்தபட்டனர்.
அதில் இவர்களுக்க்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆபாச வீடியோக்கள் பார்ப்பதல் ஆண்களுகுக்கு மூளையில் தூண்டுதல் அதிகமாவதாகவும்,ஆனால் இது எதிர்மறையாக உடல் ரீதியான பாதுகாப்பின்மையை அதிகரிக்கச் செய்வதாகவும், தாம்பத்தியம் மீதான ஈடுபாட்டைக் குறைப்பதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்ட விர்ஜினியா பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு நாடுகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan