ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த வெண்நிற பனிப்பாறைகள்! காரணம் என்ன?

1 பங்குனி 2020 ஞாயிறு 06:36 | பார்வைகள் : 12228
அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போன்று காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோற்றமளிக்கும் வியப்பூட்டும் காட்சியை படம் பிடித்த உக்ரைனின் வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சி தளத்தில் உள்ள விஞ்ஞானிகள், கிளமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas Nivalis) என்ற பாசியே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பச்சை நிற பாசி, முதிர்ச்சியடைந்து பனிப்பாறைகளில் படியும்போது, அதிகபட்ச தட்பவெப்பநிலையை சமாளிக்க மின்கடத்தா செல் சுவரையும் சிவப்பு நிற கரோட்டினாய்டு அடுக்குகளையும் உருவாக்குவதாக கூறப்படுகிறது. இதன்பொருட்டே பனிப்பாறைகள் இளம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.