Paristamil Navigation Paristamil advert login

63 வருட காதல்.... 78 வயதில் லவ் ப்ரொபோஸ் செய்த நபர்

63 வருட காதல்.... 78 வயதில் லவ் ப்ரொபோஸ் செய்த நபர்

10 ஆடி 2023 திங்கள் 06:44 | பார்வைகள் : 5917


63 வருட காத்திருப்புக்குப் பிறகு, 78 வயதான தாமஸ் மெக்மீகின் (Thomas McMeekin) தனது உயர்நிலைப் பள்ளி தோழியான (School Crush) நான்சி கேம்பெல்லிடம் (Nancy Gambell) தனது காதலை வெளிப்படுத்தினார்.

இருவரும் ஒருவரையொருவர் ப்ரோபோஸ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tampa Bay சர்வதேச விமான நிலையத்தில் தான் தாமஸ் மெக்மீக்கின் நான்சி கேம்பெல்லுக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது இதயத்தில் வைத்திருந்த அன்பை கூறினார்.

நான்சி தனது காதலை இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டதால், சுற்றி இருந்த பார்வையாளர்கள் இருவரையும் வாழ்த்தினர்.

இந்த மனதைக் கவரும் சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


வீடியோவின் தொடக்கத்தில், விமான நிலைய நெரிசலில் தாமஸ் மெக்மீக் தனது காதலிக்காக பொறுமையிழந்து காத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது.

சிறிது நேரம் கழித்து விமானத்தில் இருந்து வரும் நான்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்.

இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்ட பிறகு ஒன்றாக நடக்கிறார்கள். வீடியோவில் தாமஸ் மெக்மீக் நான்சியை அமைதியாக உட்காரவைத்த பிறகு, அவரது முழங்காலிட்டு ஒரு கடிதத்தை எடுத்து தனது காதலை முறைப்படி முன்மொழிவதைக் காணலாம்.

"மனைவியாக, தோழியாக, காதலியாக நான் விரும்பிய எல்லாமுமாக நீதான் இருக்கிறாய். என் காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வேறு எதனுடனும் ஒப்பிடவும் முடியாது. என் வாழ்வின் இறுதி நாட்களை உனக்காகவும், இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக உன்னை வைத்திருக்க விரும்புகிறேன்.

உன் வாழ்க்கைத் துணையாக என்னை ஏற்று எனக்கு மதிப்பளிக்க வேண்டுகிறேன்" என்று ப்ரொபோஸ் செய்தார்.

உடனடியாக அப்பெண்ணும் 'ஆம்' என்று பதிலளிக்க, மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தனர்.

மேலும் பல பயணிகளும் இருவரின் காதல் விவகாரத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிப்பதை வீடியோவில் காணலாம்.

இந்த ஜோடியின் காதலை பலரும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். சிலர் தங்கள் திருமணத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

மற்றவர்கள் அந்த வீடியோ தங்களை அழ வைத்ததாக எழுதினர். இன்ஸ்டாகிராம் கணக்கு Majically News இந்த அரிய காதல் வீடியோவை வெளியிட்டது.

 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்