Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ரத்தம் குடித்து தொப்பை வளர்க்கும் அபூர்வ மக்கள்

ரத்தம் குடித்து தொப்பை வளர்க்கும் அபூர்வ மக்கள்

15 பங்குனி 2022 செவ்வாய் 08:49 | பார்வைகள் : 14842


உலகம் முழுவதும் வித்தியாசமான மற்றும் விநோத பழக்க வழக்கங்களைக் கொண்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை இன்றும் பின்பற்றி வருகின்றனர். கேட்பதற்கு விநோதமாகவும், வியப்பாகவும் இருந்தாலும், அவர்களைப் பொறுத்தவரை அது பாரம்பரிய மரபு. அதனை ஒருபோதும் அவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அப்படி, தொப்பை வளர்ப்பதை மரபாக கொண்டிருக்கும் விநோத ஆப்பிரிக்க பழங்குடியின ஆண்களைப் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா?. 
 
எத்தியோப்பிய பழங்குடிகள்
 
ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவகை பழங்குடியினர்களின் பெயர் போடி. அவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி தொப்பை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தொப்பை வளர்த்து கொழுத்த ஆண்களாக இருப்பவர்களுக்கு அந்த பழங்குடியினர்களுக்கு இடையே ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கும் என்பதால், பசுவின் ரத்தம் குடித்து தொப்பையை வளர்க்கின்றனர்.
 
எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் அவர்கள் பெரும்பாலும் வசிக்கின்றனர். சிலர் பாலுடன் ரத்தத்தைக் கலந்து குடிப்பார்கள். பசுவின் ரத்தம் வேண்டும் என்பதற்காக பசுவை போடி பழங்குடியினர்கள் கொல்லமாட்டர்கள். மாறாக, உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் காயத்தை ஏற்படுத்தி, அதில் இருந்து ரத்தத்தைப் பெற்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ரத்தம் குடிப்பதற்காக பிரத்யேக போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது.
 
கயல் எனப்படும் பழங்குடியின மக்களின் புத்தாண்டில் திருமணமாகாத ஆண்கள், பசும்பால் மற்றும் ரத்தத்தைக் குடிக்க வேண்டும். இந்தப் போட்டிக்காக அவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே தயாரிப்புகளைத் தொடங்கிவிடுவார்கள். போட்டிக்கு தயாராகும் ஆண்கள், எந்தபெண்ணுடனும் உறவு கொள்ளக் கூடாது. குடிசையைவிட்டு வெளியே வரக்கூடாது. அவர்களுக்கு உணவாக பசும்பாலும் ரத்தமும் கொடுக்கப்படும். சூரிய உதயமாகும்போது 2 லிட்டர் அளவில் கொடுக்கப்படும். மீதமுள்ள கோப்பை ரத்தம் மற்றும் பாலை நாள் முழுவதும் குடிக்கவேண்டும். . போட்டி நாளில் அவர் தன் உடம்பை எப்படி வளர்த்துள்ளார் என்பதை வெளியுலகுக்கு காட்ட வேண்டும். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்