Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நாட்டிகல் மைல் என்றால் என்ன?

நாட்டிகல் மைல் என்றால் என்ன?

21 மார்கழி 2022 புதன் 06:27 | பார்வைகள் : 13138


 நாட்டிகல் மைல் (nautical mile) என்பது கடற்பயணங்களின் போதும்,விமானப் பயணங்களின் போதும், விண்வெளிப்பயணங்களின் போதும் , துாரங்களைக் கணிக்க பயன்படுவதோடு, பிராந்திய நீர்ப்பரப்பின் எல்லையைக் குறிக்கவும் உபயோகப்படுத்தி வரும் ஓர் அளவு முறையாகும்.. இதைக் கடல் மைல் என்று தமிழில் சொல்லலாம்.

 
ஒரு நோட்டிக்கல் மைல் என்பது தரை அளவைக் குறிக்கும் statute mile ஐ விட கொஞ்சம் அதிகமாக இருக்கும். (இங்கே முன்னர் உபயோகத்திலிருந்த மைல் என்ற துார அளவைச் சொல் இப்பொழுது நம் நாட்டில் பாவனையில் இல்லை.முன்பு 1.6கிலோ மீற்றர் துாரமே ஒரு மைல் எனப்பட்டது.)
 
ஆனால் ஒரு நோட்டிக்கல் மைல் statute mile ஐ விட அதிகமாக இருக்கும் அளவு 0.15 மாத்திரமே!
 
1 nautical mile = 1.1508 statute miles
 
பூமியை இரண்டு பாதிகளாக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள். பூமத்திய ரேகையை ஒட்டி, பூமியை இரு பாதிகளாக வெட்டியெடுத்து, ஒரு பாதியை பூமத்திய ரேகையில் ஒரு வட்டமாகப் பாருங்கள். இந்த வட்டத்தை 360 பாகைகளாகப் பிரிக்கலாம். அதன் பின்னர் ஒரு பாகையை 60 நிமிடங்களாகப் பிரிக்கலாம். பூகோளத்தில் ஒரு நிமிட ஆர்க் (A minute of arc ) ஒரு நோட்டிக்கல் மைல் துாரத்தை காண்பிக்கின்றது..
 
ஒரு கப்பல் பயணிக்கும் வேகத்தை knot என்ற அளவை மூலம் கணிக்கிறார்கள். வழமையாக முடிச்சு என்று பொருள்படும் அதே சொல்லைத்தான்தான், கப்பல் பயணிக்கும் வேகத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மணிக்கு எத்தனை நோட்டிக்கல் மைல் பயணிக்கும் என்றே வேகக் கணிப்பு செய்யப்படுகின்றது.
 
ஒரு நோட்டிக்கல் மைல் என்பது 1.852 மீற்றர் துாரத்தைக் குறிக்கும்(இது பன்னாட்டு அளவு முறை)
 
ஆங்கிலேய முறைப்படி ஒரு நோட்டிக்கல் மைல் என்பது 1.1508 மைல் அல்லது 6076 அடியைக் குறிக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்