Paristamil Navigation Paristamil advert login

இயற்கையும், நீயும்..

இயற்கையும், நீயும்..

23 பங்குனி 2012 வெள்ளி 15:58 | பார்வைகள் : 15244


 

அதிகாலை
சூரிய ஒளியில்,
லேசாக வீசும் காற்று
பனித்துளிகளில் உரசலில்
துளிரும் பூக்கள் போன்று
அரங்கேறுகின்றது
உன்னோடான காதல்.

கண் நோக்கும்
இடமெங்கும்
பரந்தே கிடங்கும்
பசுமை நிறைந்த
வயல்வெளிகள் போல்
நீண்டே செல்கின்றது
உன் நினைவுகள்..

நந்தவனமெங்கும்
நாணத்துடன் சிரிக்கும்
 பூக்கள்
சுண்டி இழுக்கின்றன
உன் கண்களை போல்..

தென்றலில் மிதந்து
அசைந்தாடும் மரங்கள் போல்
உன் கொடியிடை நடை..

ஓராயிரம் நட்சத்திரங்கள்
கூடி நின்று
கும்மாளம் போடுவதாய்
உன் புன்னகை..

இப்படி நீண்டே
செல்கின்றது
இயற்கையின் ஒட்டத்தில்
நீழலாய் ஆடுகின்றது
உன் நினைவுகளும் சேர்ந்து.

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்