Paristamil Navigation Paristamil advert login

உன்னை என்னில்!

உன்னை என்னில்!

10 சித்திரை 2012 செவ்வாய் 20:05 | பார்வைகள் : 15206


 

ரம்மியமான இரவுவேளையில்
வானம் அமைதியில் கிடக்க
நிலவோ புன்னகையுடன்
நானோ கண்ணீருடன்...

விரிந்த கிடக்கும்
வானத்தில்,
திட்டுத் திட்டாய்
முகில் கூட்டம் - என்
மனதின் எண்ணவோட்டத்தில்
பரந்து கிடப்பதோ
உன் நினைவுகள்.

சஞ்சலமடைந்த மனசு
அமைதி இழந்து
தனிமையில் சிக்கி
தவிக்கும் வேளையில்,
குளிர்ச்சியுடன் வீசும் காற்று
உரசி செல்கையிலும்
நினைவுத் தீ
மூண்டு எரிகிறது
கருகியே போகிறேன்
முழுவதுமாய்..

சதியாகி போன
வாழ்வை எண்ணி,
வானத்தில் மூழ்கி
கரைந்து போகும்
விண்மீன்களைப் போல்
புதைத்து விட்டேன்
உன்னை என்னில்!

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்