Paristamil Navigation Paristamil advert login

உனை நீ உணர்ந்து வரும் வரை

உனை நீ உணர்ந்து வரும் வரை

28 வைகாசி 2012 திங்கள் 17:54 | பார்வைகள் : 9244


 

அன்பே என் ஆருயிரே
அடங்கிடுமோ என் ஆசை
அழியா சொத்தென்று
அனுதினமும் சொன்னாயே
அநாதையாய் நான் நிற்கிறேன்
அலட்சியம் செய்து நீ போவதேன் ?

இன்றியமையா துன்பத்திலும்
இறுதிவரை நீ என்றாய்
இன்று ஏன் இறுமாப்பு கொள்கிறாய்
இனியவள் நீ என்று
இதயத்தை இழந்தவன் நான் - நீ
இல்லை என்றால் என்னாகும் என் நிலை ?

உண்மையாய் உன்னை போற்றுகிறேன்
உன் உணர்வை மதிப்பதனால்
உன்னையே தினம் நினைத்து
உருகும் எனை ஏன் நினைக்க மறந்தாய்
உன் உணர்வை அழிப்பதாலா ?

உதறி விட்டு நீ போனாலும்
உலகில் நான் உள்ளவரை
உற்றவளாக உன்னை எண்ணி
உனக்காக காத்திருப்பேன்
உனை நீ உணர்ந்து வரும் வரை....

- சிந்து.எஸ்

வர்த்தக‌ விளம்பரங்கள்