Paristamil Navigation Paristamil advert login

உன் ஸ்பரிசங்கள்

உன் ஸ்பரிசங்கள்

8 ஆனி 2012 வெள்ளி 19:26 | பார்வைகள் : 16255


 

சேலை கட்டயில்
என் இடை வளைத்து
இழுத்தனைக்கிறாய்..


தேநீர் தருகையில்
வளைக்கரம் பிடித்து
முத்தமிடுகிறாய்..


உன்னை கடந்து போகையில்
என் கூந்தல் பிடித்து
இழுக்கிறாய்..


எங்கே கற்று கொண்டாய்
இந்த குறும்புகளை ?
ஓ..! நீ ஸ்ரீ கிருஷ்ணனின்
அம்சமானவனா?


தென்றல் கூட என்னை தீண்டாமல்
விலகி செல்கிறது..
மழைத்துளி என்னில் விழும் முன்
உறைந்து விடுகிறது..


நம் வீட்டு நாய் குட்டி கூட
எட்டி நின்று என்னை
ஏக்கத்தோடு பார்க்கிறது..


இவற்றுக்கெல்லாம்
உன்னை வென்று என்னை
தீண்டும் சக்தி இல்லையடா..


ஆனால்..
இந்த சேலைக்கு மட்டும் என்ன
உன்னை விட நெருக்கமாக என்னில்..?

- நிலா.எஸ்

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026