பாவியானேன் ....!
23 புரட்டாசி 2012 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 15364
தொட்டிலில் இட்டவளை
சுடுகாட்டில் இட்டுவிட்டேன்
கெட்டவன் போலாகி
வெட்டத்தில் தவிக்கின்றேன் ...
பாலுட்டி வளர்த்தவளை
பாலுற்றி அனுப்பிவிட்டேன்
அன்னமிட்ட தெய்வத்திற்கு
அரிசியிட்ட பாவி நானே ..
கிட்டத்தில் நின்றென்னை
கட்டி அனைத்தவளை
எட்டத்தில் நின்றின்று
தீயிட்ட பாவிநானே ..
கெட்டவன் என்றுசொல்லி
தள்ளி வைத்த ஊரார்கள்
கிட்டத்தில் வந்தெனக்கு
அறிவுரைத்த என் தாயே ...
பட்டத்தை பெற்றபோது
பாராட்டி வைத்தவளை
சுட்டேறியும் தீதனை
வைத்துவிட்ட பாவியானேன் ..
வஞ்சகன் போலின்று
வஞ்சமில்லா உந்தனுக்கு
விஞ்சு மிளிர் தீயதனை
வைத்துவிட்ட நஞ்சனானேன் ..
ஆறுதல் சொல்லுதற்கு யாருமில்லை
என்னருகில் இன்றெனக்கு
அன்னையே ..உன் அடிதேடி
தவிக்கின்றேன் நானின்று ...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan