உயிரில் கலந்த உறவே

5 கார்த்திகை 2012 திங்கள் 12:12 | பார்வைகள் : 12939
உயிரில் கலந்த உறவே
என் நிழலில் புகுந்த நிலவே
அழகாய் சிரிக்கும் சிலையே
எனை மெதுவாய் சாய்த்த அழகே
வா வா காதல் செய்வோம்
வானம் முடியும் வரை
காதல் செய்வோம் வா வா
வளைந்த வானவில் அழகுதான்
உன் புருவங்கள் அதையும் மிஞ்யுதே
ஒற்றை நிலவு அழகுதான்
உன் இரட்டை விழிகள் அதையும் மிஞ்யுதே
கார்முகில்கள் அழகுதான்
உன் கருங்கூந்தல் அதையும் மிஞ்யுதே
சிமிட்டும் நட்சத்திரங்கள் அழகுதான்
உன் வைரப்பற்கள் அதையும் மிஞ்யுதே
மாலை நேர சூரியன் அழகுதான்
உன் சிவந்தகன்னங்கள் அதையும் மிஞ்யுதே
வானை பிளக்கும் மின்னல் ஒளி அழகுதான்
உன் காந்தப்பார்வை அதையும் மிஞ்யுதே
சாரல் மழைத்துளிகள் அழகுதான்
உன் முத்தான வியர்வை அதையும் மிஞ்யுதே