நிலவின் காமம்...!!
21 தை 2018 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 13439
மோதி ஆர்ப்பரிக்கும் அலைகளால்
கடலின் நெடிய தனிமை
குறைவதாயில்லை...
கடல் கருணை செய்த
சிறு மணல்கரை வெளியில்
இரு நாய்க்குட்டிகள்
செல்லமாய்க் கடித்துப்புரண்டு
சண்டையிட்டுக் கொண்டன
மீந்த கரையை மூன்று பாத
முத்திரையிட்டு நிரப்பி
விளையாட்டாய்
ஒரு வட்டச்சுற்றைக்
காலடிகளால் வரைந்து
மீளாப்புதிர் வழியில்
கடல் முன் சிறைபிடிக்கப்பட்டது
இரண்டு நாய்கள்
என்பதில் நிச்சயமுமில்லை.


























Bons Plans
Annuaire
Scan