வேடனுக்கு நம்பிக்கை முறிக்க தெரியவில்லை.....!!
26 தை 2018 வெள்ளி 14:24 | பார்வைகள் : 13047
சிறகிழந்து வீழ்ந்து கிடக்கிறது
ஒரு சின்னஞ்சிறிய பறவை
அது எழுவதும் வீழ்வதுமாக துடிதுடிக்கிறது...
மீண்டும் மீண்டும் அவ்வாறே.
அது பறந்துசெல்ல துடிக்கிறது..
அதன் ஒரே நம்பிக்கை
இப்போது அதற்கு
சிறகு முளைத்துவிடும் என்பதல்ல
உயரே விரிந்த வானம்
ஒன்று இருக்கிறது என்பது மட்டுமே...
வேடனுக்கு அதன்
சிறகை முறிக்கத் தெரிந்திருக்கிறது.
ஆனால் அதன் நம்பிக்கையை?..


























Bons Plans
Annuaire
Scan