கல்லறையில் ஓர் கனவு

29 சித்திரை 2018 ஞாயிறு 14:12 | பார்வைகள் : 12533
அன்றைய விடியலில்
தன கனவுகளை நோக்கி
பயணமாகிக் கொண்டிருந்தாள்
பாரதி கண்ட
புதுமைப் பெண்
ஆனால் அவள்
கண்ட கனவுகள்
நனவாகாமல்
போனது தான்
காலம் செய்த கொடுமை
காரணம்
அன்று அவள்
ஈவிரக்கமே இல்லாத
மனிதர்கள் என்ற
வண்ணம் பூசிய
மிருக இனங்களால்
சூறையாடப்பட்டாள் ;
வாழ்வில்
சாதனைப் பெண்ணாக
ஒளிர வேண்டியவள்
அன்று
தன் பெண்மையை இழந்தாள்
தன் கனவுகளை இழந்தாள்
இறுதியில் அவள்
வாழ வேண்டிய
வாழ்க்கையை இழந்து
மண்ணோடு மண்ணாகி
போனாள்
ஆனாலும்
அவள் கண்ட கனவுகள்
இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கின்றது
அவள் வாழும்
கல்லறையில்............!