இரை தேடும் பறவை....!!

17 ஆனி 2018 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 13035
இறைவன் அளித்ததோ
இரு இறக்கைகள்
பறக்கத் தெரிந்தபின்
சிறகடித்து
பறப்பதோ பல காததூரம் !
கூட்டிலே .....
முடங்கிக் கிடக்கவில்லை
குஞ்சுக்கு பசியாற்ற
கொஞ்சமும் சலிக்காமல்
பறக்கிறது பறவை
இரை தேடும் பறவை !
சோம்பேறிகளே...
கடவுள் அளித்த
கை கால்கள் நன்கு
இயங்கிய பின்னும்
ஓடி உழைக்காமல்
இச்சையுடன்
பிச்சையெடுக்கிறாயே !
சோம்பேறிக் கூட்டங்களே....
கரை தேடும் அலைகள்போல்
இரை தேடும் பறவைகளை
விண்ணிலே ஊன்றி கவனி
உழைத்து வாழ நினை
உயரும் உன் நிலை !
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025