அலை பாயும் மனதினிலே...!
1 ஆடி 2018 ஞாயிறு 11:17 | பார்வைகள் : 13356
சிற்பி
கையிலே சிற்றுளி
செதுக்க முடியாமல்
சிலையாக நின்றான்
அலை பாயும் மனதோடு !
அவன்
வசிப்பது வசந்த மாளிகை
புசிப்பது அறுசுவை உணவு
படுப்பது பஞ்சு மெத்தை
தூக்கம் கண்கள் தழுவாமல்
துக்கம் மனதோடு தழுவி
தூங்காமல் அலை பாய்கிறதே!
அவன்
பொய் முகத்தை
மெய் முகமெனக் காட்டி
பணம் பதவி புகழ் நாட்டி
பசித்தவன் போல்
மன நிம்மதி தேடி
கடல் அலைபோல்
கவலையில் அலைகிறானே !
உலகில்
காதலே அலைபோலே
மோதலே அதன் மேலே
காதலர்கள்
முடிவில் சாதலே நினைப்பது
அலை பாயும் மனதினிலே !


























Bons Plans
Annuaire
Scan