Paristamil Navigation Paristamil advert login

அம்மாவுக்கு ஒரு கவி......!

அம்மாவுக்கு ஒரு கவி......!

8 வைகாசி 2016 ஞாயிறு 20:39 | பார்வைகள் : 15624


 ஆயிரம் சொல்தேடி 

அதனுள் பொருளெடுத்து
அன்பினால் தொடுக்கின்றேன்
அம்மாவுக்கு ஒரு கவி......!
 
அன்பென்னும் சொல்லின் 
அளவு கோல் அம்மா. ....!
ஆயிரம் உணர்வின் - ஓர் 
ஆயிஷம் அம்மா. . ..!
பண்பென்னும் சோலையின்
பசுமையும் அம்மா. ....!
இரவு நில வின்
இனிமையும் அம்மா. ...!
 
உண்ட உணவை
உமிழ்ந்தே ஊட்டிடுவாள்.
உடலுள் வைத்து 
உயிரை காத்திடுவாள்.
உலகில் என்னை
உயரச் செய்திடுழாள்.
 
சிலரை வியப்பில் ஆழ்த்த 
சிந்தனை செய்திடுவாள்.
உணவை தினம் ஊட்டி - அதில் 
உணர்வை பருக்கிடுவாள்.
உண்மை பேச தினம் 
உணர்த்திடுவாள்.
 
பொறுமை கற்று தந்திடுவாள்
பொய்யா உரையும் பேசிடுவாள்
பணிவும் சொல்லி தந்திடுவாள்
பாவை போல் எனை பார்த்திடுவாள்.
 
அகிலம் போற்ற செய்திடுவாள்
அவையில் என்னை இருத்திடுவாள்
வினைகள் எல்லாம் போக்கிடுவாள்
விடியும் வரை காத்திருப்பாள்.
 
- றொபின்சியா

வர்த்தக‌ விளம்பரங்கள்