Paristamil Navigation Paristamil advert login

மௌனம் மௌனமே..!

மௌனம் மௌனமே..!

5 ஐப்பசி 2016 புதன் 18:16 | பார்வைகள் : 12865


 அந்திவானத்தில்

சூரியன் வழுக்கி
விழுந்ததைப் போல்
நீயும் வந்து என்
நெஞ்சுக்குள் விழுந்தாய்
 
உன் விழிகளில் எப்போதும்
மௌனத்தையே பேச வைத்தாய்
 
தினம் என் கனவுக்குள் நீ வந்து
குரல்கொடுத்தாய்
காதோரம் நீ வந்து 
கவிதையாய் சிந்தினாய்
 
உன் நினைவுகளால் 
என் நெஞ்சை வருடவைத்தாய்
 
வடியாத நதியொன்று
மனசுக்குள்
ஊர்வலம் வந்து சென்றது
 
இடையில் உனக்கு
நடந்தது என்ன
இதயத்தை ஏன்
இரண்டாக்கிச் சென்றாய்
 
இறந்த காலம் மீண்டும் வந்தால்
இதயத்திற்கு வருமடா நின்மதி
 
கண்டதெல்லாம் கனவே என்று
இதயம் சொல்லியழ
 
கண்ணீரால் மட்டும் 
உண்மையை அறிந்து
கொள்கிறேன்
 
என்னைச் சுற்றி சுற்றி வரும்
சோக நினைவுகளால்
விழி மூடாத இமைகளாகி
 
அழாத விழிகள் அழுது
துடிக்கின்றன
விழாத கண்ணீர் விழுந்து
நெஞ்;சை நனைக்கிறன
 
எந்தன் சோகம் தீர்வதற்கு
இனியொரு மருந்து இல்லையடா
 
அழுது தீர்ப்பதற்கும்
எனக்கு ஆயிரம் கண்கள் இல்லையடா
 
இரக்கம் இல்லா உனக்குள்
ஏனடா இந்த மாறுதல்
 
உனக்கு தெரியுமா
இப்பொழுதெல்லாம்
என் இதய அறைகளில்
நிறைந்திருக்கும் சோகத்தால்
 
மௌனம் மொளனமே
உள்ளே உறங்குகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்