பேரூந்து காதல்..!
5 ஆனி 2017 திங்கள் 17:59 | பார்வைகள் : 15733
முகமாலை பஸ்ஸில்
முன் இருக்கையில் கன்னியொருத்தி
அரியாலை கடக்கும்வரை
அலட்சியமாக இருந்தவன்
நாவற்குழி தாண்டி போகையிலே
நான் மறந்தேன் என்னையே
ஏனோ கைதடி இறக்கமென
கண்டெக்ரர் மணி அடிக்கையிலே தான்
நீ என் கண்களில் அகப்பட்டாயே
நுணாவில் தாண்டும் வரை
உனை நான் நோக்கியதே இல்லை
சாவகச்சேரி தாண்டிட
சஞ்சலங்கள் தான் மனதில் நிறைந்ததே
மீசாலை கடந்திட
மனதில் ஏதோ லேசாக படர்ந்ததே
கொடிகாமத்தில் இறங்கிடுவாளோ
என்ற ஏக்கம்தான்
எழுந்ததே அடி மனதில்
மிருசுவில் தாண்ட தாண்ட
உயிர்கூட ஏதோ
கொஞ்சம் ஊசலாடித்தான் போனதே
முகமாலை நெருங்கிட நெருங்கிட
எங்கே தான் இறங்கிடுவாளோ என
மனசு கிறுங்கித்தானே போனதே
தற்செயலாய் திரும்பி பார்க்கையில்
உசனில் நீ இறங்கிட எத்தனிக்கையில் - என்
உசிரு சற்று ஆடிப்போனேதேயடி....!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan