நீ வந்து போனதால்...!!!
                    3 ஐப்பசி 2017 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 13400
என் எண்ணங்கள் முழுவதும்  
பெண்ணே!
உன்னில் தொலைந்து போனதால்..
பார்க்கும் இடம் எல்லாம்
உன் ஞாபக அலை 
வந்து  மோதுகின்றது.
பார்வையால் சந்தித்து  
கண்களால்  வலை வீசி
காதல் மொழி   கொண்டு 
என்னோடு உறவு கொண்டதால் 
உன் அன்பு கூட
 அர்த்தமானதாக தோன்றியது.
நிறம் மாறும் மலர்கள் போல  
காதலை மறந்து  நீ 
பிரிவை தந்ததால்
கலைக்க முடியாத வலி 
ஆனது உன் நினைவுகள்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan