Paristamil Navigation Paristamil advert login

இப்படியும் ஒரு வாழ்க்கை....!!

இப்படியும் ஒரு வாழ்க்கை....!!

15 ஐப்பசி 2017 ஞாயிறு 15:07 | பார்வைகள் : 13272


நண்பனுடன் சிறிது நேரம் கதைப்பு
தோழியுடன் நலம் விசாரிப்பு
அவ்வபோது கண்டவர்களுடன் சிலாகிப்பு
புன்னகையுடன் யாரோ சிலரிடம் ரசிப்பு
இப்படியே முழுதாய் அரைநாள் முடிந்திருந்தது.
 
விரல்கள் ஒவ்வொன்றாய் எண்ணி
முகம் கொள்ளாப் பூரிப்புடன் பேச எத்தனிக்கையில்
வேறு ஒரு தொலைதூர அழைப்பு..
எல்லோரையும் அரவணைத்து
பேசிக் கலந்து நீ முடிக்கும்போது
என் விரல்களின் நுனிகளில் எஞ்சியிருந்த
ஈரம் உலரவேயில்லை,
எனக்கென நீ ஒதுக்கிய ஒருநாள் தொடங்கவுமில்லை,
 
ஆயினும் - அந்தக் குறிஞ்சிப்பூ தினம் முடிந்து
உன் பயணத்துக்கான பேருந்து காத்திருந்தது
இன்று முழுக்க நீ காணாத என் விழிகளுக்குள்ளும்
ஒரு கேள்வி தொக்கியிருந்தது,
 
அந்தப் பேருந்தின் இந்தப் பயணத்தில்
எப்போதும் நிரம்பியிருக்கும்
உன் அலைபேசிக் கோப்பையை மீறி
என் எந்த நினைவுகளை நீ எடுத்துச் செல்கிறாய்?
என் நாட்குறிப்பில் வழக்கம்போல்
உன் மௌனத்தையும் கைபேசியையும்
நான் வரைந்துவைக்கிறேன்!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்