போட்டியில் பங்கு பெறாமலே அழகிப் பட்டம்...!
20 ஐப்பசி 2017 வெள்ளி 13:25 | பார்வைகள் : 14717
மழை பெய்யாமலே மண்
வாசம் வருகிறது...!
உன் பாதம் மண்ணில்
பட்டவுடன்...!
உன் மவுனம் தான்
உனக்கு அழகு என்றேன்
அதனால்,
சிலையாகவே மாறிப்போனாய்
எனக்காக...!
போட்டியில் பங்கு
பெறாமலே அழகிப்
பட்டம் வென்றுவிட்டாய்
என்னிடம்...!
நமது திருமணத்திற்கு
துணைப் பெண்ணாய்
அந்த நிலவையே
அழைக்கிறேன்....!
உன் அழகிற்கு
இணையாக...!





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan