Paristamil Navigation Paristamil advert login

என்னுள் எரியும் தீ...!!

என்னுள் எரியும் தீ...!!

29 ஐப்பசி 2017 ஞாயிறு 11:16 | பார்வைகள் : 15219


கண்ணால் பார்க்கும்போது 
கவிதை வருகிறது
 கனவில் பார்க்கும்போது
 கண்ணீர் வருகிறது...
 
உணர்வுகள் முழுவதும்
ஒருங்கே ஓடுகிறாய்...
 உள்ளிருந்து நீ... என்
 
உயிரைச் சுடுகிறாய்...
நேரில் வந்து நீ
 
நிலவாய் சிரிக்கின்றாய்...
 நினைவில் வந்து
 நெருப்பாய் நிற்கின்றாய்...
 
உறவாய் என்றும்
 உனையே கேட்பேன்...
உயிரையும் கூட
ஈடாய் கொடுப்பேன்...
 

வர்த்தக‌ விளம்பரங்கள்