தனிமைகளின் நண்பன்!

23 கார்த்திகை 2019 சனி 17:39 | பார்வைகள் : 13537
கண்ணாடி பார்த்தே
புன்னகைக்க பழகு...!
உன் விரல் நுனிகளை
நீயே முத்தமிடு...!
உன் தோள்களில் சாய்ந்துகொள்ள
உன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...!
கைகளிரண்டால் உன்
கன்னம் தடவு...!
உன் தேகத்தை
நீயே கட்டியணை...!
ஆறுதல் தேடினால்
அவமானங்களே மிஞ்சும்...!
உன் தனிமைகளின்
உண்மையான நண்பன்
நீ மட்டுமே...
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025