Paristamil Navigation Paristamil advert login

புத்தரின் புன்னகை...!!!

புத்தரின் புன்னகை...!!!

19 தை 2020 ஞாயிறு 11:08 | பார்வைகள் : 13389


அல்லும் பகலும் தவமிருந்து
ஆசையே துன்பத்துக்கு காரணம்
போதி மரத்தடியில் புத்தர்
போதித்தார் புன்னகையாக! 
 
உலகில் காணும் இன்பங்கள்
உன்னை மயக்க நினைத்தால்
அநித்தியமென மனதில் நினை
போதித்தார் புன்னகையாக! 
 
மண்ணில் எப்பொருள் மீதும்  
மக்கள் ஆசைப்படக்கூடாது
மனதில் ஆசைபட்டார் புத்தர்  
மௌனப் புன்னகையாக! 
 
அன்புதான் இன்ப ஊற்று
எதிரியிடம் இரக்கம் காட்டு
எதிரியும் இறங்கி வருவான்   
போதித்தார் புன்னகையாக!
 
துன்பத்திலிருந்து விடுதலை 
உன் கோபத்தை துறந்து விடு
அமைதி தானாக சரணடையும்
போதித்தார் புன்னகையாக 
 
அன்பின் மூலம் வெறுப்பை
உன்னிலிருந்து விரட்டு
போதனைகளை புத்தர்
சாதனைகளாக வாழ்ந்து காட்டி
போதித்தார் புன்னகையாக!

வர்த்தக‌ விளம்பரங்கள்