Paristamil Navigation Paristamil advert login

பட்டதாரி இளைஞன்...!!

பட்டதாரி இளைஞன்...!!

16 புரட்டாசி 2018 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 12468


கதிரவன் உதித்த நேரம் - சென்றேன்
கல்லூரி சாலை ஒரம்,
 
வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
வந்தது வசந்த கால நாட்கள்,,
 
சொந்தமில்லா பல உறவு,
சொந்தமாக வேண்டிய ஒர் உறவு,,
 
கானல்நீராய் ஆனது வாழ்க்கை,
கண்ணீராய் போனது நம்பிக்கை,,
 
போதும் இந்த துன்பம் என நினைத்தேன்,
பேருந்து நிலையம் செல்ல துடித்தேன்,,
 
திரும்பும் போது வயதான அன்னையின் சிறுகடை,
திரும்பிவிட்டேன் மீண்டும் சிறை நோக்கி நடை..............

வர்த்தக‌ விளம்பரங்கள்