அவளும்... அந்த மலரும்...
16 மார்கழி 2018 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 12904
பெரும் இரவில் பெய்த
பனித்துளி மழையில்
பாதி நனைந்திருந்தது
அதிகாலை பூத்த
அழகான அந்த மலர்...!
நீண்ட இரவு விடிந்ததும்,
நீ வந்து தொட்டுச்சென்றாய்
முற்றத்தின் ஓரத்தில்
முளைத்து நின்ற அந்த மலரை...
உன் விரல் பட்டுச்சென்றபின்
மலரிதழ்களில் மிச்சமிருந்த
பனிநீர் துளிகளெல்லாம்
வண்டுகள் வந்துண்ணும்
தேன்துளிகளாயிருந்தது...!


























Bons Plans
Annuaire
Scan