முகம் தழுவி...!
27 ஆடி 2019 சனி 03:16 | பார்வைகள் : 12400
வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!
தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!
பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!
பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!
உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...


























Bons Plans
Annuaire
Scan