தாயே...!!!
 
                    31 வைகாசி 2021 திங்கள் 13:12 | பார்வைகள் : 14490
நினைவில் உன்முகம்
மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!
மீண்டும் ஒருமுறை 
வாழ்ந்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு 
மரணமும் வேண்டும்.
கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த 
கைகளையிழந்தேன்
எத்தனை பிறவிகள் 
எடுப்பினும் 
அத்தனை பிறவியும் 
தாயாக வந்துவிடு...
அரை தசாப்தம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் 
சில நினைவுகள்....
வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......
பட்டு மடியில்
தாலாட்டு....
செல்லம் என்ற 
சிறு அணைப்பு.....
சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்
மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் 
தூய அன்புக்கு நிகர்.....
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan