அழகு
9 ஆனி 2021 புதன் 13:00 | பார்வைகள் : 14782
விண்ணுக்கு மதி அழகு
மண்ணுக்கு மரம் அழகு
பொன்னுக்கு நகை அழகு
பக்திக்கு தயவு அழகு
சக்திக்கு உடல் அழகு
புத்திக்கு புகழ் அழகு
உழைப்புக்கு வியர்வை அழகு
ஏழைக்கு செம்மை அழகு
புகழுக்கு அடக்கம் அழகு
ஆடலுக்கு அபிநயம் அழகு
பாடலுக்கு மெட்டு அழகு
ஊடலுக்குச் சேர்வது அழகு
உண்மைக்கு உயர்வு அழகு
அன்புக்கு அன்பே அழகு
பண்புக்கு அமைதி அழகு
அருளுக்கு பொன்மனம் அழகு
இருளுக்கு கருமை அழகு
பொருளுக்கு கொடை அழகு
உயிருக்கு மூச்சு அழகு
பயிருக்கு பசுமை அழகு
தயிருக்கு சுவை அழகு
எண்ணத்திற்கு நினைவு அழகு
கண்ணுக்கு இமை அழகு
பெண்ணுக்கு கற்பு அழகு
மயிலுக்குத் தோகை அழகு
வெயிலுக்கு வெப்பம் அழகு
வயலுக்கு வரப்பு அழகு
ஒற்றுமைக்கு பிரியாமை அழகு
ஓடத்துக்கு துடுப்பு அழகு
ஒளவைக்கு தமிழ் அழகு
ஏற்றத்துக்கு கிணறு அழகு
ஐந்துக்கு வளைவு அழகு
நட்புக்கு பிரியாமை அழகு
தூய்மைக்கு வெண்மை அழகு
துன்பத்துக்கு கண்ணீர் அழகு
இன்பத்துக்கு புன்னகை அழகு
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan