மனித நேயம் காப்போம்
 
                    18 ஆடி 2021 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 15962
வாழ்க்கை கல்வி
விரும்பிக் கற்றதால்
நல் ஒழுக்கத்தை 
அடைந்தோம் !
நல்ல நல்ல
நம் பண்புகளால்
பகைவனும்
நண்பன் ஆனான் !
பாடுபட்டு உழைத்ததால்
உடல் ஆரோக்கியம்
நம்மோடு உறவாடியது !
வேலை வேலை
நாளும் என்றிருந்ததால்
நம் சோர்வே
சுறுசுறுப்பாகியது !
கள்ளமில்லா
உள்ளத்தை
நாடி ஓடியதால்  
குழந்தை ஆனோம் !
நல்ல நல்ல
எண்ணங்களை நாளும்
வளர்த்துக் கொண்டதால்
நம் வாழ்வே  
அமைதியானது !
அறிவு நிறைந்த
நூல்களை
தேடித் தேடி கற்றதால்
தூய பாதையை
நமக்குக் காட்டியது !  
நம் வாழ்வில்
பிறர் இன்னல் அகற்றும்
இதயம் இருந்ததால்  
உதயமானது இன்பம் !
இப்போதும்
எப்போதும்
தப்பாது
மனிதநேயத்தில்
வாழ்ந்தால்
நாம் புனிதனாவோம் !
                         வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan