அம்மாவின் செடி

5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 14166
அம்மாவை
தனியே விட்டு திரும்பியபோது
கிறீச்சிட்டு மூடிய அந்தக்
காப்பகத்தின் கதவுகளுக்கு
வயசாகிவிட்டதா வசைபாடியதா
புரியவில்லை
விடிந்தபோது
வாடிப்போய் இருந்தன பூக்கள்
அதன் பின்
என்னால் நீரூற்றப்படுவதை
விரும்பாமலே முடிந்து போனது
அம்மா வளர்த்த அந்தச்செடி
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025