கட்டிட தொழிலாளியும் அவன் கட்டிய கட்டிடமும்...!!
13 கார்த்திகை 2021 சனி 10:41 | பார்வைகள் : 13978
அஸ்திவாரம் அமைக்க
ஆழமாய் தோண்டிய ஞாபகம்
சதுர கருங்கற்கள் அடுக்கி
தர தலையில் சுமந்து
வந்த ஞாபகம்
மணலையும், சிமிட்டும்
கலந்து கொடுத்த
ஞாபகம்
கண் எதிரே கம்பீரமாய்
நீ வளர்ந்து வந்த
ஞாபகம்
வளர வளர கூலியை
பெற்று டாஸ்மார்க்கை
தேடி ஒடிய ஞாபகம்
வண்ண மயமாய் வளர்ந்து
அடுக்கடுக்காய் நின்று
கொண்டிருக்கும், உனக்குள்
எத்தனை மனிதர்கள்
ஆடம்பரமாய் உடையணிந்து
பரபரப்பாய், அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டு !
இந்தாப்பா! கட்டிட வேலை
செஞ்சவங்க எல்லாம்
வந்து உட்காந்து சாப்பிட்டு
போக சொல்லு !
கிழிசலை மறைத்துக்கொண்டு
கம்பீரமாய் நானும்
பந்திக்குள் நுழைகிறேன் !


























Bons Plans
Annuaire
Scan