காதலன் புலம்பல்!

20 கார்த்திகை 2021 சனி 07:12 | பார்வைகள் : 14312
காதலன் அவளைப் பார்க்கும்போது
அவள் நிலத்தைப் பார்க்கின்றாளே!
காதலன் வானைப் பார்க்கும்போது
அவள் அவனைப் பார்க்கின்றாளே !
காதலனை நேரில் பார்த்தால்
அவள் கண்மலர்கள் வாடியா போகும்?
காதலனிடம் கண்களால் பேசினால்
அவள் கருவிழிகள் கலங்கியா போகும்!
அவள் இதழ் பிரிந்து பேசினால்
பூவிதழ் சுவை குறைந்தா போகும்?
காதலன் அவளைத் தொட்டால்
உணர்வில் மயங்கி விடுவாளா?
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025