காதலியின் நினைவுகள்
27 கார்த்திகை 2021 சனி 09:18 | பார்வைகள் : 16235
எனது தடித்த தசைகள்
மெலிந்து உடலில் லாடுகிறது
ஆனால் என்னில் வெடித்தகாதல்
இன்றும் பூத்துக்குலுங்கிறதுஎன்னில்
பூத்துக் கொட்டியவெண் நரைகள்
நடுவினில்இன்று கருமேகம் எட்டிப்பாா்க்க
தினம்தினம் என்மனம் ஆசைக்கொள்கிறதுவிழித்தே
திரிந்த என்விழிகள்இன்று இமைக்கத் துடிக்கிறது
தீா்ந்துப் போன மணித்துளிகளை
அதன் நகலாய் ஏற்க
என்மனம் நித்தம் ஏங்குகிறது
அலையாக பறந்த என்காதலை
பிடிக்க என்னிதயம் வலையாகிறது
மழைப் போல் தூவிய
என்காதல் துளியை பிடித்து
அதில் தேய்ந்து மூழ்கப்போகிறேன்
உன்னுருவலை என்றும் பாா்பாபேன்
என்மனதில் பேசும் வாா்த்தைகளால்


























Bons Plans
Annuaire
Scan