நாட்குறிப்பு எழுதிய நாட்கள் !
11 மார்கழி 2021 சனி 10:57 | பார்வைகள் : 14369
நாட்கள் உதிரும்போது
நினைவுகள் நிற்க
நாளும் குறிப்பு
நாம் எழுத வேண்டும்!
நாட்குறிப்பு
மீண்டும் மீண்டும்
புரட்டிப் பார்க்கும்போது
இனம் புரியா இன்பம்
ஓர் இனிய அனுபவம்!
நாட்குறிப்பில் எழுதும்
எழுத்துக்கள் எல்லாம்
எழுத்துக்கள் அல்ல
எண்ணங்களின் குவியல்
சில எண்ணங்கள்
அனுபவப் பாதைகள்
அவைகள் உதயமானதோ
துடிக்கும் நம் உள்ளத்திலே!
பலவித வண்ணங்களில்
பல்வேறு வடிவங்களில்
எழுதலாம்
வண்ணங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம்
தினம் தினம்
உதயமான எண்ணங்கள்
மாறுவதில்லையே !


























Bons Plans
Annuaire
Scan