நட்பு ...

11 ஐப்பசி 2020 ஞாயிறு 17:28 | பார்வைகள் : 12734
தற்போதெல்லாம்
அடிக்கடி
திருக்குறளில்
தஞ்சமடைகிறது
மனசு ...
அந்தவகை
நட்புக்கள்
வளர்ந்து பெருகலின்
தேய்ந்து குன்றலே மேல்
என்கிறார் வள்ளுவர் ..
தீ நட்பு
கூடா நட்பு
இவைகளை நீட்டி
என்னை அரவணைத்துக்
கொள்கிறார் பெருந்தகை ...
என்
மனம் ஒட்டிய
வடுக்களைக் கலைந்து
அவர்கள் முள்
“ வாளாதிரு “ என்கிறார் ...
உலகம் அப்படித்தான்
உன் இயல்புத்தமை
மாறாதிருக்கட்டும்
அன்புக் கட்டளையிடுகிறார் ...
நட்பை
கொன்றவர்களுக்கும்
விலை மாதுக்களுக்கும்
அதிக வேற்றுமைகள் இல்லை
என்கிறார் ...
நல்லவர்களோடும்
ஒத்த மனத்தோடும்
கிடைத்த நடப்புக்களை
“ சாகும் வரை
விட்டுவிடாதே “
அறிவுறுத்துகிறார் ...
வள்ளுவரோடு
நட்புக் கொண்டபின்
அதிகக் கவனமாயிருக்கிறேன் ..
நடக்கிற
நடப்புக் கொலைகளுக்கு
நான் காரணமாகாதிருக்க வேண்டும் ...
மனது
ஒரு மாயவலை
பின்னிக்கொண்டு
கூட்டத்திற்குள்ளும்
தனித்து நிற்க ஆரம்பித்திருக்கிறது ...
யாரோடும்
எளிதாய்
நெருங்கிவிட முடிவதில்லை ...
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025